Shreya Ghoshal

Advertisment

மேற்கு வங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பிரபல பின்னணிப் பாடகி ஷ்ரேயா கோஷல், தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழி படங்களிலும் பாடிவருகிறார். தமிழில், 'முன்பே வா', 'பூக்களே சற்று ஓய்வெடுங்கள்' உள்ளிட்ட பல வெற்றிப் பாடல்களைப் பாடியுள்ள இவர், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், இமான், அனிருத், சந்தோஷ் நாராயணன் என அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="28cd1795-0e0d-468e-b4ae-4ab6c2499688" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside_20.png" />

கடந்த 2015 ஆம் ஆண்டு ஷிலாதித்யா என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஷ்ரேயா கோஷல், தற்போது கர்ப்பமாக உள்ளார். இத்தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ஷ்ரேயா கோஷல், அப்பதிவில், "வாழ்வில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள எங்களுக்கு உங்கள் அன்பும் ஆசீர்வாதமும் தேவை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இதனையடுத்து, திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் ஷ்ரேயா கோஷலுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.